மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

பேட்மிண்ட்டன்: இந்தியா உலக சாதனை!

பேட்மிண்ட்டன்: இந்தியா உலக சாதனை!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றார் பி.வி.சிந்து.

சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் சீனாவைச் சேர்ந்த சென் யு ஃபெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார் பி.வி.சிந்து. நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-7, 21-14 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

சிந்து 2013, 2014ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2017, 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அவர் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். அதிலும் 2017ஆம் ஆண்டு ஜப்பான் வீராங்கனை நஸோமி ஒகுஹாராவிடம் இரண்டு புள்ளிகளில் பட்டத்தை பறிகொடுத்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவுடன் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.

கடந்த 2017ஆம் ஆண்டில், இதே நஸோமி ஒகுஹாராவிடம் தங்கத்தை பறிகொடுத்த பி.வி.சிந்து, இம்முறை தொடக்கத்திலிருந்தே தனது வலிமையான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

போட்டி நிறைவில் கழுத்தில் தங்கத்துடன் நின்ற பி.வி.சிந்து, இந்திய தேசிய கீதம் வாசித்ததும் மேடையில் நின்றபடிபடி கண்ணீர் மல்க விருதை ஏற்றுக்கொண்டது அவருக்கும் இந்தியாவுக்குமான வரலாற்று தருணம். இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை பெறுகிறார் பி.வி.சிந்து.


மேலும் படிக்க


ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon