மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

கணக்கே இல்லாத வங்கியில் கடன் பெற்றதாக விவசாயிக்கு நோட்டீஸ்!

கணக்கே இல்லாத வங்கியில் கடன் பெற்றதாக விவசாயிக்கு நோட்டீஸ்!

திருவாரூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் வாங்காமலேயே 3.90 லட்சம் கடன் பெற்றதாக விவசாயி ஒருவருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவாரூரைச் சேர்ந்த பாண்டியன் என்கிற விவசாயிக்கு விளமல் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து சமீபத்தில் நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸைப் பார்த்த விவசாயி பாண்டியன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த நோட்டீஸில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதாகவும் கடனை கட்டவில்லை என்றால் 2சதிவிகித வட்டி வசூல் செய்வதாகவும் கோரி வங்கி நிர்வாக நோட்டீஸில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளதாகவும், ஆனால் வங்கி நிர்வாகம் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பாண்டியன் விளமல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் தனக்கு வங்கிக் கணக்கே இல்லை எனவும், கடன் எதுவும் வாங்காத நிலையில் கடன் வாங்கியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வங்கி நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.பி.ஐ மற்றும் வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டு பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், பாண்டியன் கடனைக் கட்டவில்லை எனக்கூறி அவருடைய மற்றொரு கிளையில் வைத்துள்ள கணக்கிலிருந்து 4600 ரூபாய் பணத்தை 2 சதவிகித வட்டித் தொகையாக வங்கி வசூல் செய்துள்ளது. இது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளார் விவசாயி பாண்டியன்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon