மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

செப்டம்பர் 17: காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு!

செப்டம்பர் 17: காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு!

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, நுரையீரல் திசுப்பை நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். அவருக்கு பாமகவின் சார்பில் காடுவெட்டியிலும், புதுச்சேரியிலும் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் கோனேரிக்குப்பத்தில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்திற்கு குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அங்கு அவருக்கு உருவச் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குருவின் சொந்த ஊரில் பாமக சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 8 மாதமாக கட்டிமுடிக்கப்பட்ட மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது.

இதுதொடர்பாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. காடுவெட்டி கிராம மக்கள் கூடிப் பேசி ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையில், கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் சிறப்பாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஜெ.குருவின் மணிமண்டபத்தின் திறப்பு விழா, தியாகிகள் வீரவணக்க நாளான செப்டம்பர் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜி.கே.மணி, “இவ்விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, பாமக மற்றும் அதன் துணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon