மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 31 மே 2020

பாதுகாப்பு சோதனைகள்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

பாதுகாப்பு சோதனைகள்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

உளவுத்துறை எச்சரிக்கை தொடர்பாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையில் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆறு பேர் கோவையில் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து முக்கிய நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விமான நிலையங்கள் எனத் தமிழகத்தின் பல இடங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் கோவை காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது.

இன்று தமிழகம் முழுதும் சீருடைப் பணியாளர் தேர்வுகள் நடக்கின்றன. இதற்காக மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் தேர்வு மையங்களில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு டூட்டி போடப்பட்டிருக்கிறது. அதேநேரம் திடீர் உளவுத்துறை எச்சரிக்கையால் நேற்று இரவு முழுதும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தத்தமது பகுதிகளில் வாகன சோதனைகளை நடத்தியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் கூட உறங்காமல் இன்று சீருடைப் பணியாளர் தேர்வுப் பணிகளையும் அவர்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தை அமைதிப் பூங்காவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து கமிஷனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

வெள்ளம் மற்றும் புயல் வரும்போது அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது போலதான் இதுவும். ஒவ்வொரு காலகட்டத்திலும் உளவுத் துறையிலிருந்து வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. மதவாதமாக இருந்தாலும், தீவிரவாதமாக இருந்தாலும் அதை இரும்புக் கரம்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒடுக்கிவருகிறார்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon