மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

அதிகாரபூர்வமாகிறது ‘விஜய் 64’!

அதிகாரபூர்வமாகிறது ‘விஜய் 64’!

பிகில் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 64’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் பரபரப்புக்கு இணையாக இருக்கிறது ‘விஜய் 64’ படம் பற்றிய செய்திகள். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி முடித்து, அதன் இறுதிகட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் வலம்வந்து கொண்டிருந்தன.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தானா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவந்த நிலையில் படக்குழு கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகச் சில நாட்கள் முன் தகவல் வெளியாகியது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தன.

இந்த நிலையில், நேற்று மாலை ‘விஜய் 64’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு கத்தி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அனிருத் இசையமைக்கவுள்ளார்.

விஜய்க்கு நாயகியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

படத்தின் போஸ்டரைப் பார்க்கும்போது டார்க் த்ரில்லர் ஜானரில் உருவாகும் படமாக விஜய் 64 இருக்கும் என எண்ண வைக்கிறது. முகமூடி அணிந்தபடி ஒரு பாழடைந்த கட்டடத்தின் அடியில் நிற்கும் விஜய்யின் உருவம் மட்டும் தெரிவது போல வித்தியாசமாக அமைந்திருக்கிறது இந்தப் படத்தின் போஸ்டர்.

முகமூடி, யுத்தம் செய், மாயா, அடங்க மறு, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யா, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளவுள்ளார். மாநகரம் படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் படத்தொகுப்பு, ஆக்‌ஷன் ஸ்டண்ட் சில்வா. எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் ஜகதீஷ் ‘விஜய் 64’ படத்தைத் தயாரிக்கவுள்ளார். அடுத்த வருடம் சம்மர் கொண்டாட்டமாக இப்படம் வெளியாகவுள்ளதென அறிவித்திருக்கிறது எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம்.

மேலும், இப்படம் குறித்த அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. “ நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, விஜய்யின் மூன்று திரைப்படங்களை (செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா) தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது இப்படத்தையும் அதிகாரபூர்வமாக உங்களுக்கு அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். தளபதி 64 (தற்காலிக தலைப்பு) விரைவில் தொடங்கப்படும். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. படப்பிடிப்பு 2019 அக்டோபருக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 2020 ஐ இலக்காகக் கொண்டு, ஒரு வெகுஜன பொழுதுபோக்கு அம்சம் கொண்ட சினிமாவை உங்களுக்கு அளிக்கவுள்ளதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon