மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!

ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!

மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விளக்கமளிக்க ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோருக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மனைவி நளினி சிதம்பரமும் தங்களுக்கு வழங்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக கோபி கிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்துக்குக் கடந்த ஜனவரி 16ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ப.சிதம்பரம்மீது சிபிஐ, வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளன. தனது முன்ஜாமீன் மனு தொடர்பாகக் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நடந்த விசாரணையின்போது சிதம்பரம் மூத்த வழக்கறிஞருக்கான அங்கியுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். இதிலிருந்து அவர் தனது மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்தியது தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை உச்ச நீதிமன்றத்தின் துணைப் பதிவாளர், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்குக் கடந்த மே மாதம் அனுப்பினார். இதை பார் கவுன்சில் தலைவர் பிரபாகரன், வேத் ஷர்மா, ஷைலேந்திர துபே, ஸ்ரீமலி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு விசாரித்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 24) சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோருக்கு பார் கவுன்சில் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி காலை 11.30 மணிக்குள் நேரில் ஆஜராகியோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்துக்கு நாளை வரை சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon