மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

விதை நெல்லை பாதுகாக்கும் வருண்

 விதை நெல்லை பாதுகாக்கும் வருண்

விருட்சங்களின் நிழலில் இளைப்பாற ஆசைப்படும் நாம் விதைகளை மறந்துபோகிறோம்.

கல்விக்கு வழியில்லாமல் இல்லல்படும் லட்சக்கணக்கான குழந்தைகள் உள்ள இந்த நாட்டில் அது பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் ஐயோ பாவம் என ‘உச்’ கொட்டி நகர்ந்துவிடுகிறோம். கண்ணீர் சிந்தும் எமோஜியை சொடுக்கிவிட்டு நிறைவு கண்டுவிடுகிறோம்.

வீடில்லாமல் தெருவோரம் சுற்றித் திரியும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிக்னலில் காத்திருக்கும் சில நொடிகளாவது யோசித்திருப்போமா?

புதிது புதிதாக எத்தனை எத்தனை அளவுகோல்களைக் கொண்டோ பாமரர்களின் கல்வி மறுக்கப்படும் போது மன வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கை எப்படி அமையும் என்று சிந்தித்திருப்போமா?

அரசுப் பள்ளிகள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் சிலரால் இன்று அவர்களது வாழ்க்கை சரியான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னை, இராமகிருஷ்ணாபுரம் கார்ப்பரேஷன் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அந்த உன்னதப்பணிகளைச் செய்துவருகின்றனர்.

கல்வி வாசம் இல்லாமல் கண்ணெதிரே குழந்தைகள் கருகுவதை பார்த்துக்கொண்டிராமல் பெற்றோர்களிடம் பேசி பள்ளிக்கூடத்துக்கு அழைத்துவந்துள்ளனர்.

அழைத்து வந்த குழந்தைகளை தொடர்ந்து தக்கவைக்க அவர்களது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டாமா?

யாரோ வந்து கரைசேர்த்துவிடட்டும் என்று கைகட்டி ஒதுங்கி நிற்காமல் களத்தில் இறங்குகிறார் வருண் அறக்கட்டளை நிறுவனர் வருண்.

மாணவ, மாணவிகளின் கல்வி, கலை, விளையாட்டுக்காக எண்ணற்ற பணிகளை முன்னெடுத்துவரும் வருண், அப்பள்ளியின் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தகப் பைகளை வழங்கி சிறப்பித்தார்.

குழந்தை தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு புன்னகையை உதிர்ப்பதைப் பார்ப்பது வாழ்வின் பொக்கிஷத் தருணங்களில் ஒன்று. வருண் தினமும் அந்த தருணத்தை அமைத்துக்கொள்கிறார்.

எந்த உதவி என்றாலும் அழைத்தால் உடனடியாக வருகிறேன் என்ற அவரது வார்த்தைகள்தான் அக்குழந்தைகளுக்கு நாளை பற்றிய நம்பிக்கையை விதைக்கிறது.

விதை நெல் பற்றி அக்கறை செலுத்தாமல் விளைச்சலை பற்றி எப்படி கனவு காணமுடியும்? வருண் அந்த விதை நெல்களை வாஞ்சையுடன் அரவணைத்து பாதுகாக்கிறார்.

விளம்பர பகுதி

சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon