மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!

எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனை நீட்டிக்கக் கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை வரும் செப்டம்பர் 3ஆம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு வழக்கான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீனை நீட்டிக்கக் கோரி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கு விசாரணையின்போது, இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த கெடு நேற்றுடன் (ஆகஸ்ட் 23) முடிந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன் ஜாமீனை நீட்டிப்பது தொடர்பான உத்தரவை வரும் செப்டம்பர் 3ஆம் தேதி வழங்குவதாக அறிவித்த நீதிபதி, அதுவரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யவும் தடை விதித்தார். முன் ஜாமீனை நீட்டிப்பதற்கு எதிரான வாதங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு முன்பு எந்த தேதியிலும் முன்வைக்கலாம் என்று அனுமதி வழங்கினார்.

மேலும், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பிடம், “ஏன் நீங்கள் இந்த வழக்கை ஒவ்வொரு நாளும் ஒத்திவைக்க வேண்டும், ஒத்திவைக்க வேண்டும் என்றே கேட்கிறீர்கள். ஒரு வருடமாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இது என்னை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இதுதொடர்பான உத்தரவை செப்டம்பர் 3ஆம் தேதிதான் வழங்க இருக்கிறேன். அதற்கு முன்பாக நீங்கள் தெரிவிக்க விரும்புவதை வாதமாக முன்வையுங்கள்” என்று கண்டிப்புடன் கூறினார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon