மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

உங்கள் உயிரைக் காக்க ஒரு யோசனை!

உங்கள் உயிரைக் காக்க ஒரு யோசனை!

கொலம்பியாவிலுள்ள தீயணைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், அண்மையில் தீ விபத்திலிருந்து நம்மை காக்க ஒரு புதிய உயிர் காக்கும் யோசனையை முன்வைக்கிறது.

ஒரு தீ விபத்து ஏற்படும்போது தீயை எப்படி அணைப்பது, பாதிப்படைந்தவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது போன்ற பயிற்சிகளும் முன்னெச்சரிக்கைகளும் நமக்கு இருப்பதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளிலேயே அப்படியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்ற செய்திகளை கேட்கும் போது, எவ்வளவு தூரம் நாம் பின் தங்கியுள்ளோம் எனத் தோன்றலாம்.

இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களில் முதல் மூன்று இடங்களில் தீ விபத்தால் ஏற்படும் மரணங்கள் உள்ளன. 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், வருடத்திற்கு தற்செயலான தீவிபத்தில் இந்தியாவில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை 17,700. ஒரு நாளைக்கு சராசரியாக 48 இறப்புகள்.

வீடுகளில் தனியாக இருக்கும்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தற்காத்துக்கொள்வது என கொலம்பியாவிலுள்ள யு.எல் தீயணைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்(UL Firefighter Safety Research Institute) அண்மையில் அதிகரித்து வரும் தீ விபத்துக்களையும், அதற்கான காரணங்களையும் ஆராய்ச்சி செய்து ஒரு முன் யோசனையை வெளியிட்டுள்ளது.

நெருப்பு ஏற்பட்டால் முன்பே எச்சரிக்கையடைய ’ஸ்மோகிங் டிடெக்டர்’வைத்திருப்பது முக்கியம் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை விட, நாம் கேள்விப்படாத பல எளிய பாதுகாப்புகளும் இருக்கின்றன. அந்த பாதுகாப்பு யோசனை, தீ விபத்து ஏற்பட்டால் நமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடும். எளிமையாக கூறவேண்டுமெனில், ‘உங்கள் படுக்கயறைக் கதவுகளை மூடி வைக்கவும்’. ஒரு மூடிய படுக்கையறை கதவு என்பது வாழ்க்கைக்கும் இறப்புக்குமான இடைவெளியின் குறியீடு.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு வீடு பற்றி எரிந்தால் அதிலுள்ள நபர்கள் தப்பி வெளியேறுவதற்கு 17 நிமிடங்கள் வரை அவகாசமிருக்கும். இன்றைய காலகட்டத்தில், மூன்று அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களே உயிர் தப்பிப்பதற்கான அவகாச நேரமாக மாறியிருக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.

ஏன் அப்படி?

ஏனென்றால், நவீன வீடுகள் வேகமாக தீ பற்றும் தன்மையுடையவை என்பதே யதார்த்தம். கடந்த கால வீடுகள் சிறியதாக இருப்பினும், பல தனிப்பட்ட அறைகளுடன் கட்டமைக்கப்பட்டன. இந்நாட்களில் மக்கள் திறந்த வெளிகளுடன், பெரிய இடங்களுக்கு இடமளித்து வீட்டை கட்டமைக்கிறார்கள். அதாவது, நெருப்பு ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் பரவும்போது வேகமாக தொற்றுவதற்கு குறைவான தடைகளே(obstacles) உள்ளன. கூடுதலாக, வீட்டுப் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக் காரணமாக, தீ முன்பை விட மிக வேகமாக பற்றத் தொடங்குகிறது.

நெருப்பு பிடிக்கத் துவங்கும் போது, கிடைக்கக்கூடிய ஒவ்வொரு விநாடிகளுமே முக்கியமானது. உங்கள் படுக்கையறை கதவை இரவில் மூடி வைத்திருப்பது; வீட்டின் மற்ற அறைக் கதவுகளை மூடுவது ஆகியவை நீங்கள் தப்பித்து செல்வதற்கான நேரத்தை அதிகரிக்கச் செய்யும்.

யு.எல் தீயணைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (எஃப்.எஸ்.ஆர்.ஐ) மேற்கொண்ட ஆராய்ச்சியில்: ஒரு மூடிய கதவு தீயை நிறுத்துமளவுக்கு ஆற்றல் கொண்டதில்லை என்றாலும், இது ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. நெருப்பில், திறந்த கதவு கொண்ட ஒரு அறை 1,000 டிகிரி பாரன்ஹீட் (538 டிகிரி செல்சியஸ்) வேகத்தில் வீசக்கூடும். அதே கதவு மூடப்பட்டிருந்தால், அறையின் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் (38 டிகிரி செல்சியஸ்) வரை வெளியேறக் கூடும். ஒரு மூடிய கதவு, தீ எரிவதற்கு முக்கிய எரிபொருளான ஆக்ஸிஜனின் ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது.

வெப்பமும் நெருப்பும் மட்டுமே தீ விபத்தில் உள்ள ஆபத்துகள் அல்ல. யு.எல் தீயணைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சியின் கூற்றுப்படி, பெரும்பாலான தீ விபத்தில் ஏற்படும் இறப்புகள் தீக்காயங்களால் மட்டும் நேருவதல்ல; நெருப்பிலிருந்து வெளிப்படும் புகையினை விபத்தில் சிக்கிக் கொண்டவர் சுவாசிப்பதால் என்கிறது. அதனால், நெருப்பு ஏற்படும் சமயங்களில், உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறைக் கதவுகளை மூடிவைப்பது பாதுகாப்பானது. அது நாம் நெருப்பெனும் அரக்கனின் பசியிலிருந்து தப்பிக்க திட்டமிடுவதற்கு வேண்டிய கால அவகாசத்தை தருகின்றது.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon