மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கவர்மெண்டை எக்சேஞ்ச் பண்ணலாமா: அப்டேட் குமாரு

கவர்மெண்டை எக்சேஞ்ச் பண்ணலாமா: அப்டேட் குமாரு

ஆட்டோ மொபைல் துறை சரிவடையாம எந்திரிச்சு நிற்குறதுக்கு பழைய வண்டியை கொடுத்துட்டு புது வண்டி வாங்குங்கன்னு அந்த அம்மா யோசிச்சு சொன்னாங்களா, இல்ல போகிற போக்குல அடிச்சுவுட்டாங்களான்னு தெரியல. ஆனா இந்த டிவிட்டர், ஃபேஸ்புக் பக்கம் ஒவ்வொருத்தரும் ஆர அமர உட்கார்ந்து அடிக்கிறாங்க. டைவர்ஸ் கேஸ்லாம் எடுத்துட்டு வாராங்க, அதுக்குலாம் எக்சேஞ்ச் இருக்குன்னு யாருய்யா சொன்னது?

இவ்வளவு அடிவாங்கியும் எப்படி பொருளாதாரம் வேகமாகச் செல்கிறதுன்னு அவங்க சொல்றாங்கன்னு ஆபிஸ்ல நண்பர் ஒருத்தர்ட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு. ‘வண்டி பள்ளத்துல ஓடும்போது வேகமாக போறமாதிரிதான் தெரியும். விழுந்ததுக்கு அப்புறம் பொறுக்கிட்டு போறதுக்கு நாலு நாள் கழிச்சுத்தான் வருவாங்க’ன்னு சொல்றாரு.

‘நம்மளே வாண்ட்டடா வண்டியில ஏறிட்டு அவங்களையும் ஓட்டச் சொல்லிட்டு இப்ப பள்ளத்துல போறது பத்தி பேசி என்ன செய்ய’ன்னு வேற அவர் சொல்றாரு. நமக்கு எதுக்கு வம்பு, கண்ணை இறுக்கி மூடிக்குவோம்.

SΔMΣSTΣR

இந்திய பொருளாதாரம்

போல் வீழ்ந்து கிடக்கிறேன்

அவள் பிஜேபி அரசை போல் கண்டும் காணாமல் இருக்கிறாள்..!

கோழியின் கிறுக்கல்!!

பிடிக்காத இணைய‌ உரையாடலை முடித்து வைக்க உதவும் ஸ்மைலிகள் போலவே, நிஜ வாழ்வில் பிடிக்காத உரையாடலுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!

எனக்கொரு டவுட்டு

உனக்கு ஓண்ணும் தெரியாது பேசாம இருன்னு சொல்லிட்டு, இப்போ இப்படி ஒண்ணுமே தெரியாம வளர்ந்துட்டியேன்னு சொல்லி கடுப்பேத்துறாங்க மை லார்ட்..!

ரஹீம் கஸ்ஸாலி

எப்போதும் பார்த்தும் பார்க்காததுமாக போகும் நண்பன் ஒருவன் திடீரென்று நம்மிடம் வந்து 'என்னடா மாப்ளே... எப்படி இருக்கே?'ன்னு நலம் விசாரித்தால் அவன் L.I.C., ஏஜெண்டாகவோ, M.L.M., ஏஜண்டாகவோ ஆகிட்டான்னு அர்த்தம்.

ஜோக்கர்...

பெண்களை பற்றி விடையறியா கேள்விகளில் இதுவும் ஒன்று.

பஸ் ஏறும்வரை ஓரணியாய் இருந்தாலும், ஏறியவுடன் பிரிந்து நின்று கேட்கும் முதல் கேள்வி,

"யக்கா, டிக்கெட் நீங்க எடுக்கவா, இல்ல நா எடுக்கவா??!!"

கிப்சன்

ராமு : புதுசா தொழில் தொடங்க போறேன்

சோமு : தெருவுக்கா போறேள்

ரஹீம் கஸ்ஸாலி

ஆட்டோமொபைல் சரிவு வேகமாக சரியாக மக்கள் பழைய வாகனங்களை கொடுத்து எக்ஸேஞ்ச் மூலம் புதிய வாகனங்களை வாங்க வேண்டும்!- நிர்மலா சீதாராமன்.

அப்படியே நாட்டின் பொருளாதர சரிவு வேகமாக சரியாக, இந்த ஆட்சிக்கு பதில் எக்ஸேஞ்ச் மூலம் புதிய ஆட்சியை கொண்டுவர ஏதாவது வழி இருக்கா மேடம்?

பாசில்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது -நிர்மலா சீதாராமன்

• எந்த பிற நாடுகள் சோமாலியா, எத்தியோப்பியா, நைஜீரியாவை சொல்லுறாங்க போல

ஜோக்கர்...

மக்கள் அதிகம் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ~ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சர்வதேச பொருளாதார மந்த நிலைதான் இந்தியாவின் மந்த நிலைக்கும் காரணம் ~ நிர்மலா சீதாராமன்

மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், குட் காம்பினேஷன்.

கோழியின் கிறுக்கல்!!

தனக்கு தேவையான பொருளுக்கு என்ன தள்ளுபடி இருக்கிறது என்று தேடுபவன் சாதா தமிழன்!!

தள்ளுபடி இருக்கிற பொருளை எப்படி நம்மின் தேவையாக மாற்றிக் கொள்வது என்று தேடுபவன் நெட் தமிழன்!!!

உள்ளூராட்டக்காரன்

பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு (Exchange) புதிய வாகனங்களை வாங்கவும்

'எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது'

- நிர்மலா சீதாசாரம்

மெத்த வீட்டான்

நாட்டுல பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படாத தொழில் டாஸ்மாக் மட்டும்தான் !

aysha_yusuff

பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு (Exchange) புதிய வாகனங்களை வாங்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்!

தரதா சொன்ன 15 லட்சத்தை தந்தா வாகனம் என்ன, வீட்டைக் கூட நாங்க எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்குவோம்...

amudu

போல்வால்ட் வீரர்களையும், உயரம் தாண்டும் வீரர்களையும் சி.பி.ஐ போலீஸாக்கி விட்டு, இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்று சொன்னால் எப்படி.!?

James Stanly

அதாவது.. நாம 72ரூவா சம்பாதிக்கிற டைம்ல அமெரிக்காகாரன் 1ரூபாய் தான் சம்பாதிக்கிறான்..

இதுதான் புதிய இந்தியா.

ஜோக்கர்...

ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியடையனும்னா பழைய கார வித்துட்டு புது கார் வாங்கனும்..

அதே மாதிரி குடும்பமும் சீரா வளர்ச்சியடைய, என்ன செய்யணும்னா..?!?!?!

செந்திலின்_கிறுக்கல்கள்

ஆபிசில் மேனேஜருடனான மீட்டிங்கில் staffs செய்ய வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு நீங்க எதும் சொல்லனுமா எனும் கேட்கும் கருத்துக்கு எதுவும் சொல்லக்கூடாது என அர்த்தம்!

கோழியின் கிறுக்கல்!!

உலகத்திலேயே ஏன் இந்த வேர்ல்டுலேயே,

பட்ஜெட் தாக்கல் பண்ணி இரண்டு மாசத்துக்குள்ள இன்னொரு பட்ஜெட் தாக்கல் பண்ணது நம்ம நாட்டில தான் இருக்கும்!?

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon