மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

இஷாந்த் சர்மா வேகத்தில் திணறும் வெ.இ!

இஷாந்த் சர்மா வேகத்தில் திணறும் வெ.இ!

இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 189/8 மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ‘டி20’ போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது. இதன் மூலம் டி20, ஒரு நாள் போட்டிகளில் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது இந்தியா.

இந்நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று முன் தினம்(ஆகஸ்ட் 22) துவங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 68.5 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 3 ரன்களுடனும், ரிஷப் பந்த் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்டத்தில், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரஹானே 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ரிஷப் பந்த் மேலும் நான்கு ரன்கள் எடுத்து 24 ரன்னில் ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இஷாந்த் சர்மா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடித்த ஜடேஜா 58 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 297 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இஷாந்த் சர்மா வேகம் சவாலாக அமைந்தது. மேற்கிந்திய தீவுகள் 20.3 ரன்களில் 50 ரன்களுக்கு முதல் மூன்று பேட்ஸ்மேன்களை இழந்தது. 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த இஷாந்த், ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 189/8 மட்டுமே எடுத்துள்ள நிலையில், இந்தியா 108 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில், ரோஸ்டன் சேஸ் 48ரன்களும், சிம்ரான் 35 ரன்களும் எடுத்துள்ளனர். பத்து ரன்களுடன் ஜேசன் ஹோல்டர், கம்மின்ஸ்(0) களத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon