மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்

லண்டனில் அமைப்பு திரட்டும்  திருமாவளவன்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் லண்டன் சென்றடைந்தார்.

‘விம்பம்’ கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் லண்டனில் விசிக தலைவர் திருமாவளவன் எழுதிய அமைப்பாய் திரள்வோம் புத்தக அறிமுகக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக திருமாவளவன் நேற்றிரவு சென்னையிலிருந்து விமானம் மூலமாக லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் விமான நிலையத்தில் திருமாவளவனை விம்பம் அமைப்பின் நிர்வாகிகள் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர்.

லண்டனின் கிழக்கு ஹாம் நகரிலுள்ள டிரினிடிட்டி மையத்தில் இன்று மாலை நடைபெறும் அமைப்பாய் திரள்வோம் அறிமுகக் கூட்டத்திலும், அதன்பிறகு நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் திருமாவளவன், இன்றிரவு லண்டனிலேயே தங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து நாளை எஸ்ஓஏஎஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த இரு நிகழ்வுகளை முடித்துவிட்டு சென்னை திரும்பவுள்ளார். இந்த நிலையில் லண்டனில் இருக்கும் புகைப்படங்களையும் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon