மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

நடிகை மீது காதலில் விழுந்த தனுஷ்

நடிகை மீது காதலில் விழுந்த தனுஷ்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. இப்படத்தயாரிப்பானது 2016 மார்ச்சில் தொடங்கியது. அதன் பின்னர், நீண்ட இடைவெளி ஏற்பட்டது. கெளதம் மேனன் விக்ரமின் துருவ நட்சத்திரங்கள் மீது கவனத்தை செலுத்தினார்.

2017 அக்டோபரில், என்னை நோக்கி பாயும் தோட்டா படப் பணிகள் மீண்டும் தொடங்கிய போது எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. மேலும், தயாரிப்பளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இயக்குநர் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் தாமதமானது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றபோதும், படத்தின் தாமதத்தால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒவ்வொரு முறையும் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுக் கொண்டேயிருந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகையான மேகா ஆகாஷை காதலிக்கும் தனுஷ், அதனால் ஏற்படும் சிக்கல்களை சந்திப்பது போல அமைந்த கதைப் பின்புலத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் நடிகையான மேகாவிற்கு இயக்குநரால் தொல்லை ஏற்படுகின்றது. ‘மீ டூ’போன்ற சமகால விஷயங்களும் இடம்பெறுமெனத் தெரிகின்றது. தனுஷ் அண்ணனாக சசிக்குமார் கதையின் முக்கிய திருப்பமாக தோன்றவுள்ளார் என டிரெய்லர் எண்ண வைக்கின்றது.

வழக்கமாக கெளதம் மேனன் படங்களில் இடம்பெறும் விபத்திலிருந்து தொடங்கும் ‘ஹீரோ நரேஷன்’, காதல், கவிதை, துப்பாக்கி, பரபர ஆக்‌ஷன் என ‘ரீப்பீட் மோடில்’ வந்திருக்கிறது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டிரெய்லர்.

எனை நோக்கி பாயும் தோட்டா படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon