மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் விருது!

மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் விருது!

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உரிய குடிமை விருதான, ‘ஆர்டர் ஆஃப் சயீத்’ என்ற விருது இன்று (ஆகஸ்டு 24) வழங்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் இளவரசர், முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்தியாவுக்கும் -ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான உறவுகளை முன்னேற்றுவதற்காக மிகச் சிறந்த முயற்சிகளை முன்னெடுத்ததைப் பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை ஷேக் சயாத் பின் சுல்தான் அல் நஹ்யான் நினைவாக உலகத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்திய பிரதமர் மோடிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. மன்னரின் நூற்றாண்டை ஒட்டி வழங்கப்படும் விருது என்பதால் இவ்விருது முக்கியத்துவமும் பெருமையும் கொள்கிறது என்று அந்நாட்டுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon