மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது.

வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நயன்தாரா நடிப்பில் அறம், ஐரா, பிரபுதேவாவின் குலேபகாவலி, சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் ஹீரோ போன்ற படங்களைத் தயாரித்துள்ளது. அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர், சமீபத்தில் வெளியான தும்பா படத்தையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வருகின்றது.

இந்நிலையில், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘தபாங் 3’ படத்தினை வெளியிடும் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கொட்டாபாடி ராஜேஷ் இதனைப் பற்றி கூறியதாவது:

தனிப்பட்ட வகையில் நான் “தபாங்” படத்தொடரின் தீவிர ரசிகன். “தபாங்” படத்தொடர் அடித்தட்டு ரசிகன் முதல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. தபாங் படத்திற்கு தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் தபாங் 3 படத்தினை தமிழிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தில் உள்ளோம்.

இப்படம் அறிவிக்கப்பட்டபோதே வெற்றி நிச்சயமாகிவிட்டது. மேலும் இதில் சல்மான்கானுடன் மீண்டும் நடனப்புயல் பிரபு தேவா இயக்குநராக இணைந்தவுடன் இப்படத்தின் வெற்றி 200 சதவீதம் உறுதியாகிவிட்டது. இந்த “தபாங்” குடும்பத்தில் இணைந்ததற்கு சல்மான் கான், அர்பாஸ் கான், ஆதித்யா சௌஷி, பிரபுதேவா மற்றும் இக்குடுமபத்தில் உள்ள இபடத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தபாங் 3 திரைப்படம் டிசம்பர் 20, 2019ல் வெளியாகிறது.

தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப் நடித்துள்ளார்.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon