மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

அருண் ஜேட்லி காலமானார்!

அருண் ஜேட்லி காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவரும் புகழ் பெற்ற வழக்கறிஞருமான அருண் ஜேட்லி இன்று (ஆகஸ்ட் 24) டெல்லியில் காலமானார்.

66 வயதான அருண் ஜேட்லி சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உடல்நலக் கோளாறு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் தொடர்பான நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

அருண் ஜேட்லியின் உடல்நிலை கடந்த வாரம் முதலே கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. உயிர்காக்கும் கருவிகள் மூலம் அவர் சுவாசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் சில நாட்களாகவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜேட்லியின் உடல் நலம் பற்றி மருத்துவர்களிடம் விசாரித்து வந்தனர் .

இந்நிலையில்தான் அருண் ஜேட்லி காலமானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இன்று பகல் 12.07 மணிக்கு அருண் ஜேட்லி உயிர் பிரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருக்கும் பாஜக தலைவர் அமித்ஷா இந்த தகவலை அடுத்து உடனடியாக டெல்லி திரும்புகிறார். வெளிநாட்டில் இருக்கும் பிரதமர் மோடியும் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon