மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் பெரும்பாலும் அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலிலும் கூட சிறிது நேரமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு விஜயகாந்த் தலைமை வகிப்பார் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

கேப்டனை பார்க்கவே முடியவில்லை என்பதால் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி (ஆகஸ்ட் 24) இன்று தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது பல நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். விஜயகாந்த் தனது 67ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) கொண்டாட உள்ளார். அவர் பிறந்த தினத்தை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்த அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கும் ஆர்.ஓ இயந்திரம் வழங்கப்படும் என்று கட்சி பொருளாளர் பிரேமலாதா அறிவித்தார். இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் விழாவுக்காக இன்று தேமுதிக அலுவலகத்துக்குள் வந்த போது சற்று தடுமாறியிருக்கிறார். இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon