மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

முதல்வர் சொந்த ஊரில் மச்சான் செய்த நிர்வாகிகள் மாற்றம்!

முதல்வர் சொந்த ஊரில்  மச்சான் செய்த நிர்வாகிகள் மாற்றம்!

முதல்வர் எடபபாடி பழனிசாமியின் சொந்த நகரமான எடப்பாடி அதிமுக நகர செயலாளராக இருந்த ராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, எம்.முருகன் நகர செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு இன்று (ஆகஸ்டு 24) அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா-வில் வெளிவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் சேலத்துக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி மாவட்ட, நகர நிர்வாகிகளோடு பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய சில நாட்களில் ஏனிந்த மாற்றம் என்று எடப்பாடி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்,.

“எடப்பாடி நகர செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான கதிரேசன் நீண்ட காலம் பதவியில் இருந்தார். அவர் எடப்பாடி நகரமன்றத் தலைவ்ராக தேர்வான பிறகு நகர செயலாளர் பதவி ராமனுக்கு கொடுக்கப்பட்டது. ஏழு வருடமாக ராமன் தான் நகர செயலாளர் பதவியில் இருந்தார். இந்நிலையில் கதிரேசனுக்கும், ராமனுக்கும் பூசல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அண்மையில் எடப்பாடிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியிடம், ‘ராமனை இனியும் நகர செயலாளராக வைத்திருக்க வேண்டாம்’ என்று முன்னாள் நகர செயலாளரும், நகரமன்றத் தலைவருமான கதிரேசன் கறாராக தெரிவித்திருக்கிறார். முதல்வரின் மச்சான் வெங்கடேஷ் மூலமாக இதைக் கொண்டுபோயிருக்கிறார் கதிரேசன்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ் அடுத்த நகர செயலாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் சிபாரிசு செய்திருக்கிறார். தனது ஆதரவாளரான எடப்பாடி புறநகர் ஆலச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவரும் நகர மாணவரணி நிர்வாகியுமான முருகனை நகர செயலாளராக நியமிக்கலாம் என்பதுதான் முதல்வர் மச்சானின் சிபாரிசு. இதன்படியே இப்போது அறிவிப்பு வந்துவிட்டது. நகர செயலாளராக நியமிக்கப்பட்ட முருகன், அம்மன் கேபிள் என்ற பெயரில் கேபிள் டிவி வைத்திருக்கிறார் “ என்கிறார்கள்.

நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராமன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon