மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

பிக்பாஸ் சம்பளப் பிரச்சினை: மறுக்கும் சாக்‌ஷி, மீரா

பிக்பாஸ் சம்பளப் பிரச்சினை: மறுக்கும் சாக்‌ஷி, மீரா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா நிகழ்ச்சி நிர்வாகத்தின் மீது வைத்த சம்பளப் பாக்கி புகாரை அவரது சக போட்டியாளர்களான சாக்‌ஷி, மீரா மிதுன் ஆகியோர் மறுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்றுவருகிறது. வழக்கமாக போட்டியாளர்களுக்கு இடையே எழும் வாக்குவாதங்கள்தான் பரபரப்பாக பேசப்படும். இந்தமுறை போட்டியாளர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு சம்பளம் தரப்படவில்லை என்று கூறியதும் அவர் மீது நிகழ்ச்சி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்திருப்பதும் நடைபெற்றுள்ளது.

42 நாள்களில் நிகழ்ச்சியிலிருந்து விலகிய மதுமிதாவுக்கு 11,50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாகவும் விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதித் தொகையை உடனே தர வேண்டும் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியதாக மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்திருந்தது.

இதற்கு மதுமிதா, “இன்வாய்ஸ் அளித்த உடன் மீதித் தொகையை தந்துவிடுவதாக நிகழ்ச்சி நிர்வாகம் கூறியது. எனது கணவர் சென்று இன்வாய்ஸ் அளித்தபின்னர் விரைவில் சம்பளத்தை தந்துவிடுவதாக கூறினர். ஆனால் அதைத் தொடர்ந்து இப்போது ஏன் இப்படி புகார் அளித்தனர் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

இந்நிலையில் அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியில்வந்துள்ள மீரா மிதுன், சாக்‌ஷி ஆகியோர் தங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இதுபோன்ற பிரச்சினை எழவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மீரா மிதுன் இது குறித்து தெரிவிக்கும் போது, “எனக்கும் சேனலுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மதுமிதா தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார் எனத் தெரியவில்லை. எங்கள் இருதரப்புக்குமிடையே நல்ல பிணைப்பு உள்ளது. மரியாதையாக நடந்துகொள்வார்கள், நன்றாக கவனித்துக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

சாக்‌ஷி அகர்வால் நிகழ்ச்சியின் ஒப்பந்தம் பற்றி விளக்கியுள்ளார். “100 நாள்கள் முடிந்தபின்னர் தான் மீதிப் பணம் தரப்படும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் எந்த கேஸும் அளிக்கவில்லை. அதனால் இதுபோன்று மதுமிதா நடந்துகொண்டிருக்க கூடாது. அவரது ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon