மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

வாய்ப்புகளை சுருட்டும் விஸ்வாந்த்

வாய்ப்புகளை சுருட்டும் விஸ்வாந்த்

கபாலி படத்தின் மூலம் பிரபலமான விஸ்வாந்த் அடுத்தடுத்து முக்கிய படங்களில் இணைந்துவருகிறார்.

அட்டகத்தி திரைப்படத்தில் தினேஷ் கதாபாத்திரத்திற்கு அண்ணனாக நடித்த விஸ்வாந்த், கபாலி படத்தில் ரஜினிக்கு உதவும் சென்னை இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்திற்குப் பின் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமான விஸ்வாந்த், விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ், சசிகுமார் நடிக்கும் படங்களில் இணைந்துள்ளார்.

ஜியான் கிருஷ்ணகுமார் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். குருசோமசுந்தரம், மாரிமுத்து, அப்புகுட்டி, குமரவேல், மானஸா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும் படக்குழுவில் இணைந்துள்ளார்.

இதன்முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதில் விஸ்வாந்துக்கு ஜோடியாக அனன்யா நடிக்கிறார். “இப்படத்தின் சில ஷாட்டுகளைப் பார்த்த சசிகுமார் சார், எனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பாராட்டினார். நிறைய குளோஸ் அப் ஷாட்டுகள் எனக்கு உள்ளன என்று விஸ்வாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஸ்வாந்த், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் துணை நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மையமாகக் கொண்டு படம் உருவாகவுள்ளதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களை நடிக்கவைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.


மேலும் படிக்க


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon