மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

வரிச் சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

வரிச் சலுகைகள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்தியப் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் தொழில்முனைவோர்கள் தங்களது நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதார சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை 5 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமெரிக்கா, ஜெர்மனி, போன்ற வளர்ந்த நாடுகளிலும் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. சர்வதேச பொருளாதார ஜிடிபி 3.2 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார சிக்கல்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்த அவர் பல்வேறு சீர் திருத்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

”பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும். அதுபோன்று வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும். முதலீட்டாளர்கள் நலன் கருதி சர்ஜார்ஜ் எனப்படும் கூடுதல் கட்டண வரி நீக்கப்படுகிறது. தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் அவர்கள் கொடுத்த ஆவணங்களைத் திருப்பி வழங்க வேண்டும். வீட்டு மற்றும் வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும். பல்வேறு துறைகளில் சீர்திருத்தத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகளை 60 நாட்களில் திரும்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் வருமான வரித்துறை சம்மன் உள்ளிட்டவை ஆன்லைனில் அனுப்பப்படும். குறுகிய கால, நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படாது. சமூக பொறுப்புணர்வு திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது. வெளிநாட்டு முதலீடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு திரும்பப் பெறப்படும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon