மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

சிபிஐ கஸ்டடியில் எப்படி இருக்கிறார் சிதம்பரம்?

சிபிஐ கஸ்டடியில் எப்படி இருக்கிறார் சிதம்பரம்?

சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நேற்று (ஆகஸ்டு 22) அனுமதி அளித்தது டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் டெல்லி லோதி அலுவலகத்தில் இருக்கும் பிரம்மாண்ட சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சிபிஐ அலுவலகத்தில் தரைத் தளத்தில் இருக்கும் 5 ஆம் எண் லாக் அப் சூட் -டில்தான் ப.சிதம்பரம் வைக்கப்பட்டிருக்கிறார். கஸ்டடியில் சிதம்பரம் எப்படி இருக்கிறார் என்று சிபிஐ வட்டாரங்களில் விசாரித்தோம்.

“ஆகஸ்டு 22 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்துக்கு ஆஜராக செல்லும்போது தனது வழக்கமான புன்னகையோடு இருந்தார் ப.சிதம்பரம். ஏனெனில் தனக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று ஒரு வழக்கறிஞராகவே நம்பிக்கையோடு இருந்தார் சிதம்பரம். அதனால்தான் தனது வழக்கறிஞர்கள் வாதாடிய பிறகு தானும் பேச வேண்டும் என்று அனுமதி வாங்கி பேசினார். ஆனால் கடைசியில் ஜாமீன் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்தார்.

அவரது அறை விசாலமானது. ஏசி வசதி கொண்டது. வீட்டில் இருந்து வரும் உணவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையில் சிசிடிவி எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். தரைத் தளத்தில் இருக்கும் கன் ட்ரோல் ரூமில் இருந்து சிபிஐ அதிகாரி ஒருவர் அதை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். தவிர சிதம்பரம் அறையில் இரு சிபிஐ அதிகாரிகள் எப்போதும் இருப்பார்கள்.

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் விசாரிக்க வேண்டும், இரவு நேரங்களில் விசாரிக்கக் கூடாது என்பதெல்லாம் சிபிஐக்கென இருக்கும் கஸ்டடி விதிமுறைகள். ஆனால் இதெல்லாம் பின்பற்றப்படுவதில்லை. சிதம்பரத்தை அவரது அறையில் விசாரிக்காமல், சிபிஐ தலைமை அலுவலக வளாகத்திலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில்தான் வைத்து விசாரிக்கிறார்கள். வேளாவேளைக்கு வீட்டில் இருந்து உணவு வந்தாலும் சிதம்பரம் சிறிதளவே எடுத்துக் கொள்கிறார்.

இன்று காலைதான் அவருக்கு வீட்டில் இருந்து வேட்டி சட்டைகள் சலவை செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அணிந்து கொள்கிறார். இன்று காலை வழக்கறிஞர்களும் சிதம்பரத்தை சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம், ‘கார்த்தி ஏதாவது மீடியாக்கிட்ட பேசிக்கிட்டே இருக்காரு. எது பேசினாலும் உங்ககிட்ட கலந்து பேசிட்டு அப்புறம் பேசச் சொல்லுங்க. இன்னிக்கு சாயந்திரம் வரும்போது நானும் அவர்கிட்ட சொல்றேன்’ என்று சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.

இன்று (ஆகஸ்டு 23) மாலை 5.30க்கு சிதம்பரத்தின் மனைவி நளினியும், மகன் கார்த்தி சிதம்பரமும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு சென்றிருக்கின்றனர்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon