மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

திமுக காங்கிரஸ் ஆக முடியாது: கே.எஸ்.அழகிரி

திமுக காங்கிரஸ் ஆக முடியாது: கே.எஸ்.அழகிரி

சிதம்பரம் கைது விவகாரத்தில் திமுக மவுனம் காக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு இந்த கைது நடந்திருக்கிறது. சிதம்பரம் பலமுறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார், தற்போது முன் ஜாமினுக்கும் மனுதாக்கல் செய்துள்ள இடைப்பட்ட காலத்தில் மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டவை” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிதம்பரம் கைதுக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன், சென்னை அடையாறில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிடாதது வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 23) செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சிதம்பரம் கைது விவகாரத்தில் திமுக மௌனம் காக்கவில்லை. இவை தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகள். திமுக தலைவர் ஸ்டாலின் அழகாக அறிக்கை விட்டிருக்கிறார். ஒரு அரசியல் கட்சி தலைவர் அதை தான் செய்ய முடியும். காங்கிரஸ் தொண்டர் பேசுவது போலவே திமுக தலைமையும் பேச முடியுமா? எனவே அந்த வாதமே சரியல்ல. திமுகவுக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய நட்பே ஒரு நேர்மையான நட்புதான்” என்று விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon