மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

கோவை விரைந்த கமாண்டோ படை!

கோவை விரைந்த கமாண்டோ படை!

தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் சென்னையிலிருந்து கமாண்டோ படையினர் கோவை விரைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த லக்‌ஷர் இ தொய்பா தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்த நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி, அனைத்து மாவட்ட காவல்துறைக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பிலிருந்து வருகிறது. எல்லையோர மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை கேரள எல்லையில் தணிக்கைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கோவை

இதற்கிடையில் பாதுகாப்புப் பணிக்காகச் சென்னையிலிருந்து 80 கமாண்டோ படைகள் கோவை விரைந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். போச்சம்பள்ளி சிறப்புக் காவல் படையில் இருந்து ஒரு பட்டாலியன், கோவை சிறப்புக் காவல் படையிலிருந்து இரு பட்டாலியன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுதவிர மாநகர் முழுவதும் 2000 போலீசார் வாகன தணிக்கை. ரோந்து பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். கோவையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக வாகன சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கருங்கல்பாளையம், நொய்யல், சத்தியமங்கலம் உள்ளிட்ட ஒவ்வொரு சோதனை சாவடியிலும் 5க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை

சென்னையைப் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். சிறப்பு வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாகை

தீவிரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கையின் எதிரொலியாக, நாகையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகூரில் சையது அபுதாகீர் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினம் மணல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\

கோவை ஆணையர் பேட்டி

கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 6 பயங்கரவாதிகள் கோயம்புத்தூர் நோக்கி வருவதாகத் தகவல் கிடைத்தது. போதுமான அளவு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம். கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இது எச்சரிக்கை என்பது பொதுவானதுதான். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon