மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

மதுரை: கழிவறையில் வாழும் மூதாட்டி!

மதுரை: கழிவறையில் வாழும் மூதாட்டி!

மதுரையில் கடந்த 19ஆண்டுகளாக பொது கழிவறையில் வாழ்ந்து வந்த 65 வயது மூதாட்டிக்கு அரசு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை ராம்நாத் பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறையில் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி கடந்த 19ஆண்டுகளாக வசித்து வருகிறார். உறவுகள், பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட அவர் வேறு வழியின்றி அங்கு தங்கி வருகிறார். அந்த பொதுக் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து காலத்தைத் தள்ளி வருகிறார். இதுகுறித்து முதலில் ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மூதாட்டி கருப்பாயி அளித்த பேட்டியில், ”தங்க இடம் இல்லாமல் வேறு வழியின்றி இங்கு வசித்து வருகிறேன். கழிப்பறையைச் சுத்தம் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.70 முதல் 80 வரை வருமானம் கிடைக்கும். அதை வைத்துப் பிழைப்பை நடத்துகிறேன். முதியோர் ஓய்வூதியத்துக்காக அலைந்தும் ஒரு பலனும் இல்லை. கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளுக்கு ரூ.5000 நான் கொடுத்ததுதான் மிச்சம். காலையில் தான் கழிவறையைப் பயன்படுத்த மக்கள் அதிகளவு வருவார்கள். மாலை வேளையில் யாரும் வரமாட்டார்கள் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே படுத்துக்கொள்வேன். இங்குப் பாம்பு, பூச்சிகளின் தொல்லைகள் இருக்கும். ரேஷன் கடையில் அரிசி வாங்கி சமைத்துச் சாப்பிடுவேன் எனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரும் என்னைப் பார்க்க வரமாட்டார்” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார். அவர் கழிவறையில் வசிப்பதால் அக்கம் பக்கத்தினரும் கண்டுகொள்வதில்லை.

மூதாட்டி கழிவறையில் தங்கியிருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மூதாட்டிக்கு உதவுவோம், நான் பங்களிக்கிறேன் என்று பலரும் ட்வீட் செய்துள்ள நிலையில், முதல்வர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், மற்றும் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கங்களை டேக் செய்து மத்திய மாநில அரசுகள் மூதாட்டி கருப்பாயிக்கு உதவ முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

”இந்த புகைப்படங்களை பார்க்கும் போது என்னால் பேசக் கூட முடியவில்லை” என்று சிலர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர்


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon