மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

இந்தியா மந்தமான பேட்டிங்: தடுமாறிய ‘டாப்-ஆர்டர்’!

இந்தியா மந்தமான பேட்டிங்: தடுமாறிய ‘டாப்-ஆர்டர்’!

வெஸ்ட் இண்டீஸ் தீவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ‘டி20’ போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது. இதன் மூலம் டி20, ஒரு நாள் போட்டிகளில் தொடரைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது இந்தியா.

இந்த நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று (ஆகஸ்ட் 22) தொடங்கியது.

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், மாயங்க் அகர்வால் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் கீமர் ரோச் வேகத்தில், மாயங்க் அகர்வால் ஐந்து ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ‘ஒன் - டவுனில்’ களமிறங்கிய புஜாரா (2) ரோச் வேகத்தில் அவுட்டானார்.

அதன்பின் வந்த கேப்டன் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, கேபிரியல் பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன், துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானத்தைக் கடைப்பிடித்தனர். ராகுல் ஆட்டத்தின் 34.2ஆவது ஓவரில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஜ் பந்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பந்த், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் போட்டி முடிவில், 68.5 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 3 ரன்களுடனும், ரிஷப் பந்த் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச் 3 விக்கெட்களையும், கேப்ரியல் 2 விக்கெட்களையும், ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon