முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சென்னையில் மிகப்பெரும் டெலிவரி மையத்தை திறந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது அமேசான்.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் அமேசான் நிறுவனம், தமிழகத்தில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அமேசானில் நாம் ஆன்லைனின் செய்யும் ஆர்டர்கள் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மையங்களிலிருந்து தான் சென்னைக்கு வரும். இதனால் ஒரு சில பொருட்கள் வாரக்கணக்கில் எடுத்துக் கொள்வது தவிர்க்கமுடியாததாகிறது. தமிழ் நாட்டிலும் அமேசான் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமேசான் நிறுவனம் சென்னை விருகம்பாக்கத்தில் தனது மிகப்பெரும் டெலிவரி மையத்தை நேற்று(ஆகஸ்ட் 23) துவங்கியுள்ளது.
இந்த புதிய டெலிவரி மையம், அமேசானுக்கு அதன் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவாக டெலிவரி ஆர்டர்களை
விநியோகம் செய்யவும் கைகொடுக்கும் என அமேசான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான லாஸ்ட் மைல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் இயக்குனர் பிரகாஷ் ரோச்லானி தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் அதிகப்படியான ஆர்டர்களையும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற முடியும் என பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களிலும் கிளை டெலிவரி மையங்களை அமைக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
24,000 சதுர அடி பரப்பளவில் தமிழகத்தின் மிகப்பெரிய டெலிவரி மையமாக இம்மையம் செயல்படவுள்ளது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் இது மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி, அமேசான் தனது நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகத்தை ஹைதராபாத்தில் திறந்துள்ளது. இது உலகளவில் அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய வளாகமாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க
துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!
யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!
பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?
ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!
டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!