மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

உடைச்ச ஃபர்னிச்சரெல்லாம் பத்தாதா: அப்டேட் குமாரு

உடைச்ச ஃபர்னிச்சரெல்லாம் பத்தாதா: அப்டேட் குமாரு

கிருஷ்ண ஜெயந்தின்னு சொன்னாலும் சொன்னாங்க காலையில இருந்து நம்ம பயலுக எனக்கு போன் போட்டுகிட்டு இருக்காங்க. இந்த ரஜினி அன்னைக்கு போகிற போக்குல ஒண்ண சொல்லிட்டு போயிட்டாரு, நம்ம தலையை உருட்டிகிட்டு இருக்காங்க. மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணரும், அர்ஜுனனும் மாதிரின்னு பேசுனாருல.. அதுல யாரு கிருஷ்ணன்னு சொல்லிட்டா அவங்க போட்டோ வைச்சு கிருஷ்ணர் வேஷம் போட்டு மீம் போட்டு விளையாடாலாம்னு கேட்குறாங்க. இதைப் போயி நான் யாருட்ட கேட்க..? சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் பொருளாதாரத்தை முன்னேத்துற வேலையில இருக்கும் போது நான் போயி டிஸ்டர்ப் பண்ண முடியுமா? என்னது யாரு பொருளாதாரத்தை உயர்த்தன்னா கேட்குறீங்க.. இந்த கோர்த்து விடுறதுலாம் வேண்டாம்ப்பா.. அப்டேட்டை பார்த்துட்டு அப்பீட் ஆகிக்கோங்க.

Samsudeen Ismail

டாலருக்கு இந்தியா ருபாயின் மதிப்பு 72.03 ஆக உயர்ந்திருக்கிறது

-பாத்திங்களா பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது மோடி சாதனை

பழைய சோறு

பசியும்,மரணமும் யாரையும் விட்டுவைப்பதில்லை..!

கோழியின் கிறுக்கல்!!

எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும், கைநாட்டு வச்சி தான் கைப்பேசியை திறக்க வேண்டியிருக்கிறது!!

மித்ரன்

ப.சிதம்பரம் சட்டத்தை எதிர்கொண்ட முறை மிகவும் தவறானது - தமிழிசை #

ஆமா எச்.ராஜா, எஸ்.வி சேகர் எதிர் கொண்டவிதம் தான் சரியானது அப்படிதானே..?

எனக்கொரு டவுட்டு

"ஏதோ இருக்கேன்" என்ற ஒற்றை வார்த்தை சொல்லிவிடும் நான் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா என்று..!

நெல்லை அண்ணாச்சி

கடும் நிதி நெருக்கடியில்

ரயில்வே...

அதையும்...

சோலிய முடிச்சாச்சா..!!!

Abdul Hameed Sheik Mohamed

காஷ்மீரை பிரிச்சதுக்கபுறம் தீவிரவாதி இங்க ஊடுருவுறானா அங்க இருக்க தீவிரவாதி இங்க ஓடி வந்துட்டானு அர்த்தம். அப்படீன்னா இதுக்கு ஒரே தீர்வு தமிழ்நாட்டையும் மூணா பிரிச்சு விட்ற வேண்டியதுதான் ..

இப்படிக்கு

- நடுநிலை சங்கிகளான அரிய வகை அறிவு ஜீவிகள் 24x7

A.P.Perumal.

வங்கி பணத்தை கொள்ளை அடித்தவர்களை பார்த்து மோடி சும்மா இருக்க மாட்டார்.-ராஜேந்திர பாலாஜி. #

நிரவ்மோடி, லலித்மோடி, விஜய் மல்லையாலாம் டூரிஸ்ட் விசால வெளிநாடு போயிருக்காங்க போல..?

எனக்கொரு டவுட்டு

நம்ம ஊர்ல உள்ள அறிவாளிகளே போல யாரும் இருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் அந்த கேள்வியை கேட்டதும் கொஞ்சம் இல்ல நெறையாவே ஷாக் ஆச்சு.

அவர் கேட்ட கேள்வி இதுதான் !?

"நெருப்பு கோழி அவிச்ச முட்டைதானே போடும்..!?

நட்சத்திரா

சாப்பிடும்போது புத்தகம் படிக்காத - ஆச்சி அம்மாவிடம்

சாப்பிடும்போது டிவி பாக்காத - அம்மா என்னிடம்

சாப்பிடும்போது மொபைல் பாக்காத - நான் பிள்ளையிடம்

தலைமுறை மாறினாலும் ஏதோ ஒரு பழக்கம் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கிறது

மெத்த வீட்டான்

ஒருவரின் பலவீனம் தெரியும்வரைதான் அவர் மேல் இருந்த பிரமிப்பு எல்லாம் !

ரஹீம் கஸ்ஸாலி

ஆட்சியை நடத்திச் செல்வது மட்டுமே இலக்கு அல்ல; புதிய இந்தியாவை கட்டமைப்பதே முக்கிய இலக்கு!- மோடி

உடைச்ச ஃபர்னிச்சரெல்லாம் பத்ததா?

பிளாக் லைட்

பிரமாண்டமா தோற்றம் கொண்ட வீட்டுல ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால் அது தான் அந்த ஊருல உள்ள "பேய் பங்களா" என அறிக !!

ரஹீம் கஸ்ஸாலி

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல, அரசியல் ஆட்டமே இல்லை...! - அமைச்சர் ஜெயகுமார்

அதுக்காக அத்தனையும் ஜோக்கரா இருந்தால் எப்படி ஆடறதாம்?!

ஜோக்கர்...

ஒண்ணு செல்லாக்காசா இருக்கணும், இல்ல 2000 ரூபா நோட்டா இருக்கணும். ரெண்டுக்கும் நடுவுல 10 ரூபாய் காயின் மாதிரி இருக்கக்கூடாது,

நம்மள நாலு பேரு மதிக்குறாங்களா, இல்லையான்னே தெரியல..!!!

கருப்பு மன்னன்

இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை #செய்தி

திருப்பதி , அத்திவரதர்க்கு வந்த உண்டியல் பணத்தை வச்சி சொல்றார் போல ..

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon