மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ஜெயம் ரவி படத்தில் கேஜிஎஃப் வில்லன்!

ஜெயம் ரவி படத்தில் கேஜிஎஃப் வில்லன்!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் கேஜிஎஃப் மூலம் பிரபலமான ராமசந்திர ராஜு இணைந்துள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு நாடு முழுவதிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருந்தார். ராக்கி கதாபாத்திரம் சாதாரண நிலையிலிருந்து கோலார் தங்க வயல் பகுதியில் வல்லமைமிக்க கேங்ஸ்டராக உருவெடுப்பதே அப்படத்தின் கதை.

அதில் கருடா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ராமசந்திர ராஜு நடித்திருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவி, தப்ஸி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக இணைந்துள்ளார்.

இந்தப் படத்தை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்குகிறார். இப்படத்தின் படக்குழு அஸர்பைஜான் சென்று படப்பிடிப்பை நடத்திவருகிறது.

இந்தப் படத்திற்கு முன்பாக ராமசந்திர ராஜு, கார்த்தி, ராஷ்மிகா மந்தானா ஆகியோர் இணைந்து நடிக்கும் சுல்தான் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறது.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon