மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

உருவாகிறது அபிநந்தன் பயோ பிக்!

உருவாகிறது அபிநந்தன் பயோ பிக்!

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வாழ்க்கை வரலாற்று படத்தில் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் நாட்டில் பாலகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சித்தளம் மீது தாக்குதல் நடத்தியது இந்திய விமானப் படை.

பிப்ரவரி 27ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டு எஃப் 16 போர்விமானத்தை துரத்திச் சென்று வீழ்த்தினார் இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான். அப்போது, அவர் இயக்கிய மிக் -21 பைசன் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. அதிலிருந்த அபிநந்தன் பாகிஸ்தானிய ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்தார். மார்ச் 1ஆம் தேதியன்று அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. பாலகோட்: தி ட்ரூ ஸ்டோரி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தயாரித்து நடிக்கிறார் விவேக் ஓபராய்.

விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக படத்தை வெளியிட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. தேர்தலை முன்னிட்டு படத்தை வெளியிட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பின் மக்களவைத் தேர்தல் முடிந்தபின்னர் வெளியானது.

படம் வெளியாவதற்கு முன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அத்திரைப்படம் ரிலீஸுக்கு பின் ரசிகர்களிடம் வரவேற்பு பெறத்தவறியது.

இந்நிலையில் அபிநந்தனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரிக்கும் முயற்சியில் விவேக் ஓபராய் ஈடுபட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படவுள்ளது.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon