மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

சமாஜ்வாதி கட்சி உடைகிறதா?

சமாஜ்வாதி கட்சி உடைகிறதா?

சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அதிரடி முடிவெடுத்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கியமான கட்சியாக கருதப்படுவது சமாஜ்வாதி கட்சி. கட்சியை தோற்றுவித்தவரும் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தற்போது இக்கட்சியின் தலைவராக இருக்கின்றார். ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது சமாஜ்வாதி.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறிப்பதாக மாயாவதி அறிவித்தார். அதே சமயம், சமாஜ்வாதி கட்சிக்குள் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 23) சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி வெளியிட்டுள்ளார்.

ராஜேந்திர சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் அனைத்து மாவட்ட / பெருநகர நிர்வாகிகளையும் அதன் தலைவர்களின் பதவிகளையும் கலைத்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல் மட்டும் அவரது பதவியில் நீடிக்கவுள்ளார். சட்டசபை சபாநாயகர் உட்பட அனைத்து சட்டசபை பகுதிகளின் குழுக்களும் உடனடி நடவடிக்கையாக கலைக்கப்பட்டுள்ளன.

மேலும், சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், அனைத்து இளைஞர் அமைப்புகளின் மாநிலத் தலைவரையும் கலைத்துள்ளார்.

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon