மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

மீண்டும் இணையும் சத்யராஜ்-சிபிராஜ் கூட்டணி!

மீண்டும் இணையும் சத்யராஜ்-சிபிராஜ் கூட்டணி!

சத்யராஜ், சிபிராஜ் கூட்டணி 6 ஆவது முறையாக இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தந்தை மகனான நடிகர்கள் சத்யராஜும் சிபிராஜும் இணைந்து நடிப்பது புதிதல்ல. 2005ஆம் ஆண்டு வெளியான வெற்றிவேல் சக்திவேல் படத்தில் முதன்முறையாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜோர், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ், ஜாக்ஸன் துரை ஆகிய ஐந்து படங்களில் சத்யராஜும் சிபிராஜும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் 6ஆவது முறையாக சத்யராஜ், சிபிராஜ் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி 2017ஆம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தை இயக்கியவர். முதல் படத்தை மர்மம் நிறைந்த ஆக்‌ஷன் திரில்லராக இயக்கிய இவர், இப்படத்தை மர்மம் நிறைந்த ஒரு கொலை பின்னணியில் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் திரைக்கதையை கேட்டபின், சத்யராஜ் விருப்பத்துடன் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்கிறது படக்குழு. இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளிலும் சத்யராஜ், சிபிராஜ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படத்தில் பங்காற்றவுள்ள நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon