மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

ஐஎன்எக்ஸ்: சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்!

ஐஎன்எக்ஸ்: சிதம்பரத்துக்கு முன் ஜாமீன்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நேற்று மாலையில் டெல்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே முன் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுக்கள் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முன்பு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டவை என சுட்டிக் காட்டினார். அரசுத் தரப்பு வாதத்திற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார். முன் ஜாமீன் கோருவது அடிப்படை உரிமை என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை வரும் திங்கள் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவையும் அன்றைய தினம், அதாவது சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடியும் நாளான ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில் அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. ஏற்கெனவே சிபிஐ கைது செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon