மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

முத்தலாக் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முத்தலாக் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிரான மனு குறித்து பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு இன்று (ஆகஸ்ட் 23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முஸ்லிம் மக்களிடையே நடைமுறையில் இருக்கும் உடனடி முத்தலாக் விவாகரத்து முறைக்குத் தடை விதிக்கும் மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேறியது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி முத்தலாக் கூறும் கணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சமஸ்தா கேரள ஜமாய்துல் உலமா, ஜமாத் உலமா இ ஹிண்டு ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன. அதில், இது முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான நடைமுறை இல்லை. மாறாக முஸ்லீம் கணவர்களுக்குத் தண்டனை மட்டுமே வழங்கும் வகையில் இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை திருமணம், வரதட்சனை போன்ற இந்து மத வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. இதில் ஈடுபடுபவர்கள் குற்றவாளிகளாக உள்ளனர். முத்தலாக் நடைமுறையிலிருந்தால், இதேபோல் ஏன் குற்றவாளிகளாக இருக்க முடியாது. இதில் எனக்குச் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதி இம்மனுக்கள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon