மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 21 செப் 2019

காக்கியில் இணைந்த இந்துஜா

காக்கியில் இணைந்த இந்துஜா

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்துஜா.

தமிழ்த் திரையுலகில் மினிமம் கேரண்டி நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனிக்கு சமீபத்திய சில திரைப்படங்கள் கைகொடுக்கவில்லை. அண்ணாதுரை, திமிருபுடிச்சவன், காளி என அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை ஈர்க்காத நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகும் காக்கி திரைப்படத்தை எதிர்பார்த்துள்ளார்.

சாந்தனு நடித்த வாய்மை படத்தை இயக்கிய செந்தில் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். திமிருபுடிச்சவன் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஓப்பன் தியேட்டர் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். மேயாதமான் திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இந்துஜா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon