மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

சாஹோ: முதல் முறை பெற்ற கௌரவம்!

சாஹோ:  முதல் முறை பெற்ற கௌரவம்!

பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் புரொமோஷன் பணிகள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன.

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தையும் இந்தியா முழுக்க கொண்டு செல்ல படக்குழு முயற்சித்து வருகிறது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின் தரத்திற்கு இணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி சாஹோ தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. தெலுங்குப் படம் ஒன்றிற்கு டிவிட்டர் நிறுவனம் முதன்முறையாக எமோஜி வெளியிடுவது இந்தப் படத்திற்குத் தான்.

சுஜித் இயக்கியுள்ள படத்தில் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தனிஷ்க் பக்ஷி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மதி, படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், கலை சாபு சிரில் என முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon