மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

காஷ்மீரில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்?

காஷ்மீரில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்?

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பதற்றத்திலும் பாதுகாப்பு முற்றுகையிலும் இருக்கும் காஷ்மீருக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்துன் இன தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ விட்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளன.

காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்த முடிவை சர்வதேச மயமாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று அதில் தோல்வி கண்டுள்ள நிலையில் கடைசி கட்டமாக எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்த முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முயற்சியில் ஜெய்ஷி இ முகமது பயங்கரவாத இயக்கமும் ஈடுபட்டிருப்பதாகவும், இந்திய பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் நூறு பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாகவும் இதனால் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர், லடாக் என முழுதும் ராணுவமும் பாதுகாப்புப் படையினரும் பணிகளில் ஈடுபட்டிருக்க, இந்த நேரத்தில் எல்லை தாண்டி ஊடுருவலாம் என்பதே ஆப்கன் தீவிரவாதிகளை ஏவிவிடுவதற்கான பின்னணியாக இருக்கலாம் என்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல்வேறு பயிற்சி முகாம்களையும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


மேலும் படிக்க

துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon