மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

பென்சில் மீசை, படிந்த தலை: 80’ஸ் தனுஷ்!

பென்சில் மீசை, படிந்த தலை: 80’ஸ் தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அசுரன் படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

வடசென்னை படத்தின் வெற்றிக்குப் பின், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். கருணாஸ் மகன் கென் அறிமுகமாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றை ஏற்றுள்ளார்.

பூமணியின் வெக்கை நாவலைத் தழுவிய படமென்பதால் கரிசல் நிலத்தின் தன்மையோடும் வாழ்வியலோடும் இப்படம் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அதன் இறுதி கட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தனுஷ் அப்பா-மகன் என்ற இரு பாத்திரத்தில் நடித்து வருகிறார் தகவல்கள் ஆரம்பக்கட்டத்தில் உலா வந்தன. தற்போது வந்துள்ள தகவலின்படி, தனுஷ் ஒரே கதாபத்திரத்தின் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன், முறுக்கு மீசை, வெள்ளை நிற முடிகள் எட்டிப் பார்க்க தாடியுடன் இருக்கும் தனுஷின் 40வயது ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 22) மாலை தனுஷின் செகண்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பென்சில் மீசை, படிந்த தலை, பட்டை கிருதா, டெய்லரிங் சட்டை என 80’களின் தோற்றத்தில் தனுஷின் இந்த தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். வெற்றி மாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon