விளம்பரம்
சாதித்த பின் கொண்டாடித் தீர்க்கும் உலகம் அதற்கான முயற்சியில் இருக்கும் போது கண்டுகொள்வதில்லை; வெகுசிலரே ஆதரவளித்து கரம்தூக்கிவிடுவர்.
வருண் அறக்கட்டளையை நிறுவி பல்வேறு சமூகப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வரும் வருண் மணியன் அதில் முக்கியமானவர்.
சென்னை அடையாறிலுள்ள புனித லூயிஸ் காதுகேளாதோர் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து கிடக்கும் சமூகத்தில் ரௌத்திரத்துடன் அதை எதிர்த்து நின்று களமாட மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் நான்கு பேர் சுற்றி நின்று மறித்தாலும் தூக்கியெறிந்து சுழல்கிறார்கள் மாணவிகள்.
பிரச்சினைகளைக் கண்டு துவண்டுவிடாமல் வீறுநடைபோடும் அக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கி தாங்குவதோடு உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் அவர்களது இலக்கை அடைய உத்வேகம் அளிக்கிறார் வருண் மணியன்.
விளம்பர பகுதி