மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

ட்ராக்டர் உலகின் அரசன் - ஜான் டியர்!

 ட்ராக்டர் உலகின் அரசன் - ஜான் டியர்!வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

உலகில் மக்கள் உண்ணும் உணவில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்தில் ஜான் டியரின் தடம் பதிந்திருக்கும். அந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள விவசாய நிலங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது ஜான் டியர். ஒரு நிலத்தில் அதிநவீன கருவி, குறைந்த எரிபொருள் பயன்பாட்டில் அதி சிறப்பாக வேலை செய்துவருவதை நீங்கள் பார்க்க நேர்ந்தால் கண்ணைமூடிக்கொண்டு அதன் பெயர் ஜான் டியர் என்று நீங்கள் குதூகளிக்கலாம்.

தங்களுடைய தயாரிப்புகளின் திறன் மேம்பாட்டிற்காக ஒரு செயற்கைகோளையே விண்ணில் வலம்வர வைத்திருக்கும் ஒரே நிறுவனம் ஜான் டியர் தான். எதற்காக இந்த செயற்கைகோள் ஏவப்பட்டிருக்கிறது என்பதை அறிவது, சாமானிய அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்.

ஆளில்லா வாகனங்கள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆளில்லா ட்ராக்டரை அறிமுகப்படுத்தி விஞ்ஞான உலகத்தை அசரடித்தது ஜான் டியர் நிறுவனம். ரிமோட்டினால் அருகே இருந்து இயக்கப்படும் ட்ரோன்களே நமக்கு ஆகச்சிறந்த ஆச்சரியம் என்றால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் ஆளில்லா ட்ராக்டர்கள் பார்ப்பதென்பது பார் வியக்கும் செயல்.அதை சாதித்துக் காட்டியவர்கள் ஜான் டியர் நிறுவனத்தார்.

விவசாயத்திற்கு துணை புரியும் கருவியாக மட்டும் ஒரு ட்ராக்டர் இருப்பதில் இவர்களுக்கு உடன்பாடில்லை. விவசாயத்தில் ஒரு தொழிற்புரட்சியைக் கொண்டு வந்து, இன்று விவசாய தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக மாறியிருக்கிறது - ஜான் டியர் நிறுவனம்.

விளம்பர பகுதி

வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon