மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

 உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

உடல் பலமே ஒருவரது தோற்றத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. பலம் பொருந்திய உடலைத் தான் தொடர்ந்து வீரத்துக்கான விளை நிலமாக நம் இலக்கியங்களிலிருந்து சினிமா பாடல்களை வரை கூறிக் கொண்டிருக்கின்றன.

உடலினை உறுதி செய் என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடி அன்றும் இன்றும் என்றும் பொருந்தக்கூடிய பொன்மொழிகள். இளமைத்துடிப்புடனும், நோய்கள் நம் உடலை தாக்காதவாறும் காக்க சில உடல் பயிற்சிகள் அவசியமாகின்றன.

அவை உடல், மனம், ஆன்மா என அனைத்தையும் இணைக்கும் பாலமாக மாறி உறுதியான கட்டமைப்பை நமக்குத் தருகின்றன. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பரபரப்பான நகர வாழ்க்கையில் உடலுக்கென நேரம் ஒதுக்க முடியாமல் டாக்டர்களிடம் நேரம் ஒதுக்கும் பல நண்பர்களையும் நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டை விட, இந்த நூற்றாண்டில் உடல் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

ஆர்வம் இருந்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுவதற்கான வெளியோ ஒருங்கினைக்கும் அமைப்போ இன்றி தவிப்பவர்களுக்காக ஓர் அரியவாய்ப்பை ரிலா இன்ஸ்டிடூயூட்டின் ஃபிட் ஃபியஸ்டா ஏற்படுத்தித் தருகின்றது.

ஃபிட்ஃபீஸ்டா @ Ch44 சென்னையின் பல துடிப்பான குழுக்களிடமிருந்து உடற்பயிற்சி தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. சைக்கிள் ஓட்டுநர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், எடை மற்றும் வலிமை பயிற்சியாளர்கள், டிரையத்லெட்டுகள், மலையேற்றப் பயணிகள் ஆகியோர் உடல் ஆரோக்கியம் மீதான ஆர்வமுள்ள நபர்களுக்கு தங்கள் அனுபவங்களை பகிர காத்திருக்கிறார்கள்!

ஆகஸ்ட் 31ஆம் தேதி, டாக்டர் ரிலா இன்ஸ்டிடூயூட்&மெடிக்கல் சென்டர், குரோம்பேட்டை, சென்னை - 44ல் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையத்தில் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

விளம்பர பகுதி

வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon