மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

கிறிஸ்தவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்க வேண்டாம்!

கிறிஸ்தவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்க வேண்டாம்!வெற்றிநடை போடும் தமிழகம்

கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன் பட்டியலிட வேண்டாம் என வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மீது அக்கல்லூரியைச் சேர்ந்த 34 மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என்று சாமுவேலுக்குக் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமுவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பேராசிரியரின் பணி நீக்கத்தை ரத்து செய்யமுடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது என்ற கருத்தை தீர்ப்பில் சேர்த்திருந்தார்.

தனது கருத்தில் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், இந்த கல்விக்கூடங்களில் தரமான கல்வி கொடுக்கப்பட்டாலும், நன்னெறியை போதிக்கிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி என தனது கருத்தை தெரிவித்தார் நீதிபதி வைத்தியநாதன்.

இந்த கருத்து கிறிஸ்தவ அமைப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான வழக்கு செவ்வாய் கிழமை(ஆகஸ்ட் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி தரப்பில் ”இந்த வழக்கிற்கும், உயர் நீதிமன்ற கருத்துக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்று இருக்கிறது என்ற கருத்தையும், கட்டாய மதமாற்ற கருத்தையும் தனது உத்தரவிலிருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன் பட்டியலிட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் நேற்று(ஆகஸ்ட் 21) 64 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon