மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

பிக்பாஸ் அரங்கை உடைக்க நினைத்தேன்: அமீர்

பிக்பாஸ் அரங்கை உடைக்க நினைத்தேன்: அமீர்வெற்றிநடை போடும் தமிழகம்

பிக்பாஸ் அரங்கை உடைத்து சேரனை வெளியே கொண்டுவர வேண்டும் போல் இருந்தது என அமீர் தெரிவித்துள்ளார்.

ஆரி நடித்துள்ள 'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீரும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமீர், “என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை. சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்து கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் போகும் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்” என்று திரைத்துறை குறித்து பேசினார்.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதில் சேரன் பங்குபெற்றிருப்பது குறித்தும் பேசினார். “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். உதவி இயக்குநராக இருந்ததிலிருந்து அவரை நான் பிரமிப்பாக பார்த்து வருகிறேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று அவரை வரவேற்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும், அந்த அரங்கை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். பொருளாதார காரணங்களுக்காக அவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு செல்கிறேன் என கிளம்பும்போது சொன்னதால் அவரை தடுக்கமுடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று கூறினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon