மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

நான் யாரையும் மிரட்டவில்லை: மதுமிதா

நான் யாரையும் மிரட்டவில்லை: மதுமிதாவெற்றிநடை போடும் தமிழகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இன்று அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் அளித்துள்ள புகார் மனுவில் “ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே ரூ. 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதுமிதா தனக்கு வரவேண்டிய பணத்தை மட்டுமே கேட்டதாகவும் மிரட்டல்விடுக்கவில்லை என்றும் கூறினார்.

“நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன். என் மீது பொய் புகார் அளித்துள்ளது விஜய் டிவி. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன்” என்று கூறினார்.

எவ்வளவு பணம் தர வேண்டியுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதை நான் கூறமுடியாது. அவர்கள் அளித்த புகாரிலேயே அது குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

மிரட்டல் விடுத்ததாக கூறியதை மறுத்த மதுமிதா, “விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்ததற்கு பின் விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்றுவரை விஜய் டிவி வகுத்த வழிமுறைகள் படியே நடக்கிறேன். திரைத்துறையில் இருக்கும் என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. விஜய் டிவியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் தலையிட்டு இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் இதுவரை நான் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக் குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்” என்று கூறினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon