மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

‘ஜாம்பி’க்களுடன் பார்ட்டி பண்ணும் யாஷிகா - யோகி பாபு

‘ஜாம்பி’க்களுடன் பார்ட்டி பண்ணும் யாஷிகா - யோகி பாபுவெற்றிநடை போடும் தமிழகம்

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டிரெய்லர் நேற்று (ஆகஸ்ட் 21) வெளியாகியுள்ளது.

தர்மபிரபு, கூர்கா படங்களைத் தொடர்ந்து யோகி பாபு நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் ஜாம்பி. இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த் இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இணையான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஹும்மர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ‘பரிதாபங்கள்’ கோபி - சுதாகர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெற்றது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தாதாவான யோகி பாபு, யாஷிகா ஆனந்த், நண்பர்களான கோபி, சுதாகர் ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக பட்டாயா செல்கின்றனர். அங்கு வைரஸ் தாக்குதலால் ஜாம்பியாக மாறும் மக்களிடம் இவர்கள் ஒரு ரிசார்ட்டில் சிக்கிக்கொள்ள, அவற்றிலிருந்து எப்படி தப்பிப்பார்கள் என்பதைக் கலகலப்பாகச் சொல்லும் படமாக ஜாம்பி இருக்கும் என இதன் டிரெய்லரின் மூலம் உணர முடிகிறது. டிரெய்லரில் வரும் வசனங்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன.

எஸ் 3 பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை புவன் நுல்லன் இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ், ஒளிப்பதிவு: விஷ்ணு ஸ்ரீ கே.எஸ்.

ஜாம்பி டிரெய்லர்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon