மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

காஞ்சிபுரம், சிதம்பரம் அடுத்து எந்த ஊரு: அப்டேட் குமாரு

காஞ்சிபுரம், சிதம்பரம் அடுத்து எந்த ஊரு: அப்டேட் குமாருவெற்றிநடை போடும் தமிழகம்

அடேயப்பா ப.சிதம்பரம் எவ்ளோ பெரிய ஆளா இருந்தா அவரோட கைதை கண்டிச்சு போலீஸ்காரங்களே போராட்டம் நடத்துவாங்கன்னு நண்பர் ஒருத்தர் போனை பார்த்து சிலாகிச்சுகிட்டு இருந்தாரு. நானும் என்னடா இது புது உருட்டா இருக்கேன்னு போனை வாங்கி பார்த்தேன். போட்டோவை பார்த்தா அப்படிதான் இருந்தது. ஸூம் பண்ணி பார்த்தா தான் தெரியுது, காங்கிரஸ் கட்சிக் காரங்க போராடுறாங்க, அதைத் தடுக்க போலீஸ்காரங்க சுத்தி நிற்காங்க. ஏன் சார் 40 காங்கிரஸ்காரங்களுக்கு 400 போலீஸ்காரங்களைப் போட்டா மக்கள் என்ன நினைப்பாங்க?

ஆனா என்கிட்ட பேசுன ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் வேறமாதிரி சொல்றாரு. இப்ப பொருளாதாரம் தலைகீழப் போயிருச்சுல்ல, அதை எப்படி சரி செய்யன்னு மோடிக்கு தெரியலையாம். அதை நேரடியா சிதம்பரத்துகிட்ட கேட்குறதுக்கும் தயக்கமா இருந்துச்சாம். உடனே அவரை கைது பண்ணி விசாரணைங்குற பேருல மேட்டரை கறந்து நாட்டை முன்னேத்திடலாம்னு திட்டம் போட்ருக்காங்களாம்.

ஏன்ங்க அந்தக் கட்சிக்காரங்க பண்ற போட்டோஷாப் புளுகைவிட இது வேற லெவல்ல இருக்கே. யாரு கண்டா இப்படி ஒரு கதையை நாளைக்கு வரலாறா மாத்தி பிள்ளைங்க ஸ்கூல் புக்குல சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. முதல்ல அப்டேட்டை பார்த்துடுங்க.

கோழியின் கிறுக்கல்!!

மோடியும் அமித்ஷாவும் தேர்ந்த இயக்குனர்கள்!!

தங்கள் திரைக்கதையில் எழும் பொருளாதாரம், நிர்வாக சீர்கேடு போன்ற லாஜிக் குறைபாடுகளை, Article 370 சிதம்பரம் கைது போன்ற மசாலா சேர்த்து சமாளித்து விடுகிறார்கள்!!

mohanram.ko

'பேருந்தில், படிக்கட்டுகிட்ட இருக்குற சீட்ல உட்கார்ந்தா சீக்கிரம் இறங்கிடலாம்' என்று சொல்பவர்கள், இந்தியாவை வல்லரசாக்க முயல்கிறார்கள்

எனக்கொரு டவுட்டு

அந்த காலத்துல என்று ஆரம்பிக்கும்போது, "கூப்பிடுறாங்க இதோ வந்திடுறேன்” என்று சொல்லி செல்பவன் பிழைத்து கொள்வான்..!

mohanram.ko

சுவர் ஏறி குதித்து சிதம்பரம் வீட்டிற்குள் சென்ற சிபிஐ அதிகாரிகள் - செய்தி #

குட்டிச் சுவராக்கிட்டாங்க....

பிளாக் லைட்

குறிப்பிட வயத்திற்கு பிறகு உதவி என்றாலே "பணத்தேவை" என்றாகி விட்டது !!

சத்யா சத்தியமூர்த்தி

மோடி இரும்பு மனிதர்_ராஜேந்திரபாலாஜி

போன மாசம்தான திண்டுக்கல் சீனிவாசன்

மோடி தங்கமான மனிதர்னு சொன்னாரு...

அதுக்குள்ளே தங்கத்தை இரும்பா மாத்திட்டீங்களா?

பாலசுப்ரமணி

ப.சிதம்பரத்தை சிறையில் வைத்து சிபிஐ கேட்கும் முதல் கேள்வி.

"பொருளாதாரச் சரிவை சரி செய்வது எப்படி?"

Hasan Kalifa

முன்னாள் நிதியமைச்சரை தூக்கி உள்ளே போட்டுட்டால்,நம்ம நிதி நிலைமை சீராகிடும்..இதை சொன்னால் நம்மளை...

செங்காந்தள்

ரஜினிகாந்தை தவறவிட்டால் வாழ்வதற்கும் வழியில்லாமல் போகும் - தமிழருவிமணியன்

உங்களுக்குத் தானே?

ஷிவானி சிவக்குமார்

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெயக்குமார்

எங்களுக்கு எஸ்வி சேகர்னாதான் பயம் மத்தபடி சிதம்பரத்துக்குலாம் பயம் இல்லீங்க

கோழியின் கிறுக்கல்!!

மோடி சொன்ன மாதிரி வேலை போறவங்க எல்லாம் பக்கோடா கடை போடலாம் தான்!!

ஆனா வாங்கி சாப்பிட யாரு இருப்பாங்க!?

செந்திலின்_கிறுக்கல்கள்

சுவர் ஏறி குதித்து சிதம்பரம் வீட்டிற்க்குள் சென்ற சிபிஐ அதிகாரிகள் - செய்தி # மல்லையா வீட்டில சுவர் இல்ல போல?!

எனக்கொரு டவுட்டு

மிருகமாய் மாற ஒரு நொடி போதும், மனிதனாய் மாறவே யுகமே தேவை..!

மித்ரன்

2 அமாவாசைக்குள் தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படும் - கராத்தே தியாகராஜன் #

சேலம் ஜோசியருக்கே டஃப் குடுப்பாரு போல..?

கோழியின் கிறுக்கல்!!

இங்கு பலரது வாழ்க்கை எனும் வண்டி கடன் என்னும் எரிபொருளில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது!!

ஜோக்கர்...

பெண்களின் பிரச்சினை என்னவென்றால் ஆண்கள் "பொய் சொல்ல கூடாது" என்று எதிர்பார்த்தும்,

அதே நேரத்தில் "நான் செஞ்ச சாப்பாடு எப்படி?" என்று கேள்வியும் கேட்பவர்கள்..!!!

மித்ரன்

டீ கடையில் சிறிது நேரம் பணியாற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா - செய்தி #

எல்லாரும் நம்ம ஜீ மாதிரி ஆகிற முடியுமா?

உள்ளூராட்டக்காரன்

போன வாரம் காஞ்சிபுரம்

இந்த வாரம் சிதம்பரம்

ஜால்ரா காக்கா

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெயக்குமார்

எங்களுக்கு எதுனாலும் மெயின் ரோட்டுக்கு வர வச்சு பேசி தான் பழக்கம்

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon