மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

திமுக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கலந்துகொள்ளாதது ஏன்?

திமுக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கலந்துகொள்ளாதது ஏன்?வெற்றிநடை போடும் தமிழகம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கும், காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (ஆகஸ்ட் 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியாக இருக்கும் நிலையில் அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை. காஷ்மீர் பிரச்சனையை வலியுறுத்தி சென்னையில் விசிக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 27ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக் கழகத்தில் உள்ள வ.உ.சி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. திருமாவளவன் உள்பட 650 பேருக்கு முனைவர் பட்டங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற மதமாற்றம் குறித்து மீனாட்சிபுரம் மதமாற்றங்கள்- ஒரு ஆய்வு என்ற தலைப்பில் விசிக தலைவர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த வாய்மொழித் தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து, முனைவர் பட்டத்திற்கான தற்காலிக சான்றிதழ் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது முறைப்படி ஆளுநர் கையால் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்துகொள்ளவில்லை.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon