மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

உண்மைக் கதையில் யாஷிகா-மஹத்

உண்மைக் கதையில் யாஷிகா-மஹத்வெற்றிநடை போடும் தமிழகம்

யாஷிகா ஆனந்த், மஹத் நடிப்பில் உருவாகவுள்ள உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக் கொண்ட படத்திற்கு இவன் தான் உத்தமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களான மஹத், யாஷிகா ஆனந்த ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சிக்குப் பின் பிரபலமடைந்தனர். பிக் பாஸ் சீசனின் போது காதல் வயப்பட்ட இருவர், நிகழ்ச்சிக்குப் பின் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. சென்ற வருடம், இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் விவாதிக்கப்பட்டது. மஹத் யாஷிகாவை பிரிந்து தன் முன்னாள் காதலியுடன் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில், தமிழ்-கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு, இவன் தான் உத்தமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை இரட்டையர்களான அறிமுக இயக்குநர்கள் மகுவன் இயக்கிவருகிறார்கள். உண்மைக் கதையை அடிப்படையாக கொண்ட திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். சிலம்பரசன் ‘டிரங்கன் மன்கி டேன்ஸ்’ என்ற பாடலை பாடியுள்ளார். மஹத்-சிம்பு ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் மஹத்திற்காக குரல் கொடுத்துள்ளார் சிம்பு.

பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon