மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

புதிய உள்துறை செயலாளர் நியமனம்!

புதிய உள்துறை செயலாளர் நியமனம்!வெற்றிநடை போடும் தமிழகம்

புதிய உள்துறை செயலாளராக அஜய்குமார் பல்லாவை நியமனம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (ஆகஸ்ட் 22) ஒப்புதல் அளித்துள்ளது.

1984ஆம் ஆண்டு அசாம் மேகாலயா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார் பல்லா, மத்திய எரி சக்தி துறை செயலாளராக இருந்தார். கடந்த ஜூலை 24ஆம் தேதி உள்துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது உள்துறை செயலாளராக இருக்கும் ராஜிவ் கவ்பாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த சூழலில் அஜய்குமார் பல்லாவை புதிய உள்துறை செயலாளராக நியமிக்க மத்திய அமைச்சகத்தின் நியமனங்களுக்கான குழு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 21 முதல் 2021 வரை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அஜய்குமார் பல்லா உள்துறை செயலாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர மற்றத் துறை செயலாளர்களும் மாற்றப்பட்டிருக்கின்றனர். லோக்பால் செயலராக பிரிஜ் குமார் அகர்வால், பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலராக சுபாஷ் சந்திரா ஆகியோரையும் மத்திய அரசு நியமித்திருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon