மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

பால் விலை உயர்வு ஒரு பிரச்சினையா?: அமைச்சர் வருத்தம்!

பால் விலை உயர்வு ஒரு பிரச்சினையா?: அமைச்சர் வருத்தம்!வெற்றிநடை போடும் தமிழகம்

பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்று பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாயாகவும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பால் விலை உயர்வினால் தேநீர் கடைகளில் டீ விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதனை மக்கள் பிரச்சினையாகவே கருதவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு சார்பில் 667 பேருக்கு 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மக்கள் தாங்கி கொள்ளக் கூடிய அளவுக்குத்தான் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. பால் விலை உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் மக்களை திமுக தூண்டிவிடப் பார்க்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியா வல்லரசாக உருப்பெறப் போவது உறுதி. அந்த வல்லரசு நாட்டின் முக்கிய அங்கமாக தமிழகம் இருக்கும். அப்போது தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். இதுதான் காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இனி வாழ்வே கிடையாது. அது வாழாவெட்டியாகிவிட்டது என்று விமர்சித்துப் பேசிய அவர் திமுகவையும் கடுமையாகச் சாடினார்.

”இனி திமுக ஆட்சிக்கே வரமுடியாது. மக்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை திமுக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் மனமாற்றம் வந்துள்ளது. 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் வேலூரில் 8ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அடுத்து வரக்கூடிய நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை உண்டு இல்லை என்று செய்துவிடுவோம்” என்று பேசினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon